பெங்களூர் : உள்ள கெம்பாபுரா ஹெப்பலில் உள்ள சிந்தி கல்லூரியில் புதன்கிழமை 22 வயது இறுதியாண்டு பி.ஏ மாணவர் பார்கவ் என்பவர் பாதுகாவலரைக் கத்தியால் குத்திக் கொன்றார் . இந்த சம்பவத்தில் பலியான ஜெய் கிஷோர் ராய் , 52, ஹுனசமரனஹள்ளியில் வசிப்பவர் என்பதும் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.
கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்ட கலாச்சார விழாவில் பார்கவ் தனது நண்பர்கள் சிலருடன் கலந்துகொண்டார் . பிற்பகல் 3 மணியளவில், பார்கவ் கல்லூரி வளாகத்தை விட்டு வெளியேற முயன்றபோது, பணியில் இருந்த ராய் தடுத்துள்ளார். இருப்பினும், பார்கவ் கட்டாயப்படுத்தி வெளியேறினார். பின் பாதுகாவலர் வெளியேறினால் திரும்பி உள்ளே அனுமதி கிடையாது என்பது போல கூறியுள்ளார்.
இதனால் ஏற்கனவே, இருவருக்கு வாக்கு வாதம் ஏற்பட்டு இருக்கிறது. போதையில் இருந்த பார்கவ் கல்லூரியை விட்டு வெளியேற்றிவிட்டு சிறிது நேரத்தில் மீண்டும் அங்கு வந்துள்ளார். அப்போது பாதுகாவலர் ஜெய் கிஷோர் ராய் தடுத்து நிறுத்தினார். இதனால் ஆத்திரம் அடைந்த பார்கவ் அவருடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார்.
ஒரு கட்டத்தில் வாக்கு வாதம் ரொம்பவே பெரிதாக வெடித்தநிலையில் , மறைத்து வைத்திருந்த கத்தியை பார்கவ் எடுத்து பாதுகாவலரை கொடூரமாக குத்தி கொலை செய்தார். இது தொடர்பான அதிர்ச்சியான வீடியோ காட்சிகளும் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
மேலும், அஸ்ஸாமைச் சேர்ந்த பார்கவ், அவரது வகுப்பில் முதலிடம் பெற்றவர்களில் ஒருவர். ராயின் சக ஊழியர் ராஜசேகர் என்ற பாதுகாப்பு ஊழியர் அளித்த புகாரின் அடிப்படையில் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 101 இன் கீழ் கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய அணியின் இளம் கிரிக்கெட் வீரர்களான ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன், சஞ்சு சாம்சன் போன்ற வீரர்களுக்கு…
கோவை : ஆரோக்கியசாமி சாலை, ராமச்சந்திரா சாலை, டி.பி.ரோடு, லாலி சாலை, தடாகம் சாலை, கவுலிபிரவுன் சாலை, டி.வி.சாமி சாலை,…
சென்னை : விடுதலை 2 திரைப்படம் வெற்றிமாறனின் தலை சிறந்த படைப்புகளின் பட்டியலில் இடம் பெற்றுவிட்டது என்று தான் சொல்லவேண்டும். அந்த…
சென்னை : தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் 6-முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவியர்களின் உயர் கல்விக்கான செலவை…
சென்னை : மத்திய அரசின் தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் யுஜிசி – நெட் தேர்வு 30 பாடங்களுக்கு ஜனவரி 15,…
டெல்லி : கடந்த ஆகஸ்ட் மாதம் வங்கதேசத்தில் ஏற்பட்ட உள்நாட்டு கலவரத்தில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். இந்த உள்நாட்டு கிளர்ச்சி உச்சத்தில்…