பெங்களூரு: ரசாயன வெடிப்பில் 3 பேர் பலி.., 2 பேருக்கு காயம்..!

Default Image

பெங்களூரு குடோனில் நிலையற்ற ரசாயனத்தால் ஏற்பட்ட குண்டுவெடிப்பில் 3 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் 2 பேர் காயமடைந்துள்ளனர்.

இன்று பெங்களூருவில் உள்ள சரக்கு-கொண்டு செல்லும் வாகன சேவை நிறுவனத்தில் உள்ள குடோனில் சில நிலையற்ற ரசாயனம் வெடித்த காரணத்தால் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இரண்டு பேர் காயமடைந்துள்ளனர்.

மதியம் 12 மணியளவில் நடந்த இந்த சம்பவத்திற்கு 12:20 மணியளவில் சாமராஜ்பேட்டை ரேயான் வட்டத்தில் உள்ள தீயணைப்பு நிலையங்கள் விரைந்து வந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது.

பெங்களூரு தெற்கு போலீஸ் துணை கமிஷனர் ஹரீஷ் பாண்டே இது குறித்து தெரிவித்துள்ளதாவது, “பஞ்சர் கடைக்கு அடுத்த போக்குவரத்து குடோனில் குண்டுவெடிப்பு நடந்துள்ளது. பஞ்சர் கடையில் உள்ள இருவர் உட்பட மூன்று பேர் பலியாகினர், மேலும் நான்கு பேர் காயமடைந்துள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.

காயமடைந்தவர்கள் அருகில் உள்ள விக்டோரியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். காவல்துறையினர் தெரிவித்துள்ளபடி, சில நிலையற்ற இரசாயனம் காரணமாக இந்த வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம். இருப்பினும், தடயவியல் நிபுணர்கள் குண்டுவெடிப்புக்கான காரணத்தை ஆராய்ந்து வருகின்றனர் மற்றும் விரைவில் அவர்களது கருத்தை தெரிவிப்பார்கள் என்று கூறியுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்