ஒடிசா பள்ளியில் குண்டு வெடிப்பு! இரண்டு மாணவர்கள் காயம் !
ஒடிசாவின் கஞ்சம் மாவட்டத்திற்கு உட்பட்ட அஸ்கா பகுதியில் உள்ள பள்ளிக்கூடம் ஒன்றில் மர்மப்பொருள் ஒன்று கிடந்தது. அதை அப்பள்ளியில் பயிலும் மாணவர்களில் எடுத்து வந்தார்கள்.அப்போது அந்த பொருள் திடீரென வெடித்து சிதறியது.
அந்த மர்மப்பொருள் எடுத்து வந்த 2 மாணவர்களும் காயமடைந்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பள்ளி ஆசிரியர்கள் உடனடியாக அவர்களை பெர்கம்பூர் பொது மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் பள்ளியில் விசாரணை நடத்தினர். அப்போது வெடித்த அந்த பொருள் நாட்டு வெடிகுண்டு என்பது தெரிய வந்தது. இந்த குண்டை பள்ளியில் வைத்தவர் யார்? என்ன காரணம் ?என்பதை பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.