ஹரியானாவில் 734 பேருக்கு கருப்பு பூஞ்சை பாதிப்பு- 75 பேர் பலி!

ஹரியானாவில் தற்போது 734 பேர் கருப்பு பூஞ்சைத் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருவதாகவும், இதுவரை அங்கு 75 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் அம்மாநில சுகாதாரத் துறை செய்தி குறிப்பில் குறிப்பிட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் தான் உள்ளது. இந்நிலையில் கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக அடுத்தபடியாக கருப்பு பூஞ்சை நோய்த் தொற்று ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் உயிரிழப்புகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்துகொண்டே இருக்கிறது.
இந்நிலையில் ஹரியானாவிலும் பலர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அம்மாநிலத்தின் சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஹரியானாவில் இதுவரை மொத்தம் 927 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 734 பேர் தற்போது சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் மே 31-ஆம் தேதி நிலவரப்படி மாநிலம் முழுவதிலும் இதுவரை கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டவர்கள் 118 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், 75 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025