நாடு முழுதும் கடந்த மூன்று வாரத்தில் மட்டும் கருப்பு பூஞ்சையால் 2,109 பேர் பலி!

- கருப்பு பூஞ்சை தொற்றால் கடந்த மூன்று வாரங்களில் மட்டும் 2,109 பேர் நாடு முழுதும் உயிரிழந்துள்ளனர்.
- குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இதுவரை 609 பேர் உயிரிழந்துள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக கோர தாண்டவம் ஆடி வரும் நிலையில், தற்போது கொரோனாவில் இருந்து மீண்டவர்களுக்கு மிகப் பெரும் சிக்கலாக கருப்பு பூஞ்சை தொற்று நோய் பரவி வருகிறது. மியூக்கர்மைகோஸிஸ் எனப்படும் கருப்பு பூஞ்சை நோய் தொடர்ந்து அதிக அளவிலான பாதிப்பையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.
இதுவரை நாட்டில் 31,216 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடந்த மூன்று வாரத்தில் மட்டும் நாடு முழுவதும் 2,109 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். அதிலும் மஹாராஷ்டிரா மாநிலத்தில் தான் அதிகளவில் கருப்பு பூஞ்சை பாதிப்பு உள்ளது. இதுவரை மஹாராஷ்டிராவில் 7,057 பேர் கருப்பு பூஞ்சையால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 609 பேர் உயிரிழந்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
ஆனந்த் அம்பானியின் வந்தாரா: வனவிலங்கு மறுவாழ்வு மையத்தை திறந்து வைத்து சிங்கக்குட்டிக்கு பாலூட்டிய மோடி.!
March 4, 2025
“தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்” வானிலை கொடுத்த சூடான அப்டேட்.!
March 4, 2025