உத்திரகாண்டில் கருப்பு பூஞ்சை நோய் தொற்று நோயாக அறிவிப்பு…!

உத்தரகாண்ட் மாநில அரசு கருப்பு பூஞ்சை நோய், தொற்று நோயாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா வைரசின் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வரும் நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. வைரசின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில், மக்கள் இந்த பாதிப்பில் இருந்து இன்னும் மீளாத நிலையில் தற்போது கருப்பு பூஞ்சை என்ற புதிய தொற்று பரவி வருகிறது.
இந்த பூஞ்சைத் தொற்றால் பலரும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அனைத்து மாநிலங்களும் கருப்பு பூஞ்சை நோயை தொற்று நோயாக அறிவித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து தற்போது உத்தரகாண்ட் மாநில அரசு கருப்பு பூஞ்சை நோய், தொற்று நோயாக அறிவித்துள்ளது. அதுபோல தமிழகம் குஜராத் ஒடிசா பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்கள் கருப்பு நோய் தொற்று நோயாக பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
உத்திரகாண்ட் மாநிலத்தில் கருப்பு பூஞ்சை நோய் பாதிப்பு அதிகரித்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், உத்தரகாண்டில் 65 பேருக்கு கருப்பு பூஞ்சை நோய் கண்டறியப்பட்டது. அதில் 61 பேர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025