தேர்தல் ஆணையத்தை அமித்ஷா மிரட்டி வருகிறார்! மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடும் தாக்கு!
மக்களவை தேர்தல் இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் தங்களது பிரச்சாரத்தை முழுவீச்சில் நடத்தி வருகின்றனர். இதில், முக்கியமாக மேற்குவங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் முதல்வராக இருக்கும் மம்தா பானர்ஜி, பிரதமர் மோடியை கடுமையாகத் தாக்கி பிரச்சாரம் செய்து வருகிறார்.
இந்நிலையில் இவர் இன்று பேசுகையில் பிரதமர் மோடிக்கு எதிராக தொடர்ந்து பேசி வருவதால் பாஜக மேற்கு வங்கத்தை குறிவைத்துள்ளது. மேலும், தேர்தல் ஆணையத்தை மிரட்டும் வகையில் பாஜக தலைவர் அமித்ஷா பேட்டியளித்துள்ளார். அவர் தனது பொதுக்கூட்டம் மூலம் வன்முறையை தூண்டியுள்ளார்’ என தெரிவித்துள்ளார்.