பாஜக: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் பாஜக கடந்த முறை வென்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதத்தை விட குறைவான எண்ணிக்கையையே பெற்றுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது.
இது 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், அப்போது, பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று 37.7% வாக்குகளை பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில், பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று 31.34% வாக்குகளை பெற்றது.
இதன் மூலம் பாஜக, கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றி மற்றும் வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு பார்த்தால், 2024 தேர்தலில் இடங்கள் மற்றும் வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.
சென்னை : டாஸ்மாக் டெண்டர்களில் சுமார் ரூ.1000 கோடி முறைகேடு நடைபெற்றுள்ளதாக கூறப்பட்ட நிலையில் அதற்கு பொறுப்பேற்று அமைச்சர் செந்தில்…
சென்னை : இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 22-ஆம் தேதி முதல் தொடங்கப்படவுள்ள நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் போட்டியை…
சென்னை : டாஸ்மாக் தலைமை அலுவலகம், மதுபான ஆலைகள் என பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தியதாகவும், இதில் டெண்டர்…
சென்னை : நடிகை தமன்னா கடந்த சில ஆண்டுகளாக நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் கடந்த 2022-ஆம் ஆண்டிலிருந்து…
சென்னை : டாஸ்மாக்கில் ரூ.1000 கோடி அளவுக்கு முறைகேடு நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை கூறியிருந்த நிலையில். டாஸ்மாக் முறைகேட்டிற்கு எதிராக பாஜகவினர்…
சென்னை : அத்திக்கடவு திட்டம் வெற்றிபெற்றதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு கூட்டம் நடைபெற்றபோது அதில் முன்னாள் அமைச்சர்…