303., 240.! குறையும் பாஜகவின் வாக்கு சதவீதம்.! 

Default Image

பாஜக: மக்களவை தேர்தல் முடிந்து நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் வெளியாகின. இதில் ஆளும் பாஜக கடந்த முறை வென்ற இடங்களின் எண்ணிக்கை மற்றும் வாக்கு சதவீதத்தை விட குறைவான எண்ணிக்கையையே பெற்றுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் தரவுகள் படி, பாரதீய ஜனதா கட்சி (பாஜக) 2024 மக்களவை தேர்தலில் 240 இடங்களில் வெற்றி பெற்று, 36.56% வாக்குகளை பெற்றுள்ளது.

இது 2019 மக்களவை தேர்தலுடன் ஒப்பிடுகையில், அப்போது, பாஜக 303 இடங்களில் வெற்றி பெற்று 37.7% வாக்குகளை பெற்றது. 2014 லோக்சபா தேர்தலில், பாஜக 282 இடங்களில் வெற்றி பெற்று  31.34% வாக்குகளை பெற்றது.

இதன் மூலம் பாஜக, கடந்த தேர்தல்களில் பெற்ற வெற்றி மற்றும் வாக்கு சதவீதத்தை ஒப்பிட்டு பார்த்தால், 2024 தேர்தலில் இடங்கள் மற்றும் வாக்கு சதவீதத்தில் குறைவு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

appavu - pm modi
ADMK Chief secretary Edappadi palanisamy
Sunita Williams health
tn rain
VCK Leader Thirumavalavan - TN BJP Protest against TASMAC
TN Assembly - Speaker Appavu