Categories: இந்தியா

பிரதமரை கொல்ல சதி நடப்பதாக பாஜக அனுதாபம் தேடுகிறது : சரத்பவார்..!

Published by
Dinasuvadu desk
மகாராஷ்டிர மாநிலம் புனேயில் 5 பேரை போலீசார் அண்மையில் கைது செய்தனர். அவர்களுக்கு மாவோயிஸ்டு இயக்கத்துடன் தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஒரு கடிதத்தில் பிரதமர் மோடியை கொல்ல மாவோயிஸ்டுகள் திட்டமிட்டது தெரிய வந்தது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், பிரதமரை கொல்ல சதி நடப்பதாக கூறி பாஜக அனுதாபம் தேடுகிறது என்று சரத்பவார் குற்றம் சாட்டியுள்ளார். நேற்று புனேவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் கலந்து கொண்ட சரத்பவார் கூறியதாவது:- தலித் இயக்கத்தைச்சேர்ந்த சில முற்போக்குவாதிகள் ஒருங்கிணைந்து புனேயில் ஒரு கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர்.
ஆனால், அவர்களை நக்ஸல்கள் என முத்திரையிட்டு போலீஸார் கைது செய்துள்ளனர். பீமா – கோரேகான் வன்முறையின்போதும், அதில் தொடர்புடையவர்களை விடுத்து பிறரைக் கைது செய்தது காவல் துறை. இவ்வாறாக, பாஜக ஆட்சியாளர்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர்
மக்களிடையே தற்போது அக்கட்சிக்கு மதிப்பும், செல்வாக்கும் குறைந்து வருகிறது. அதன் காரணமாக இத்தகைய கொலை மிரட்டல் கடிதங்களை வைத்து அனுதாபம் தேட பாஜக முயற்சிக்கிறது. அதை மக்கள் நம்பமாட்டார்கள். பாஜக விரிக்கும் வலையில் விழுந்து ஏமாறவும் மாட்டார்கள்” இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக, காங்கிரஸ் கட்சியும் இதேபோன்ற கருத்தை தெரிவித்து இருந்தது. சமூகத்தில் மோடியின் செல்வாக்கு சரியும்போது எல்லாம் இத்தகைய கதைகள் உருவாக்கப்படுவது ஓர் உத்தி என காங்கிரஸ் விமர்சித்து இருந்தது
Published by
Dinasuvadu desk

Recent Posts

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

நிறைவடைந்த முதல் நாள் மெகா ஏலம்! தற்போதைய அணி விவரம் இதோ…!

ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…

6 hours ago

‘நாயகன் மீண்டும் வரார்’….அஸ்வினை ரூ.9.75 கோடிக்கு தட்டித் தூக்கிய சிஎஸ்கே!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…

8 hours ago

சாஹலை ரூ.18 கோடிக்கு எடுத்த பஞ்சாப்! ஆசை வைத்து வேதனையடைந்த சென்னை!

ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…

11 hours ago

அனல் பறந்த பிட்டிங்..! கே.எல்.ராகுலை 14 கோடிக்கு எடுத்த டெல்லி அணி!

ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…

11 hours ago

“இவரை நாங்க வச்சுகிறோம்”…10 கோடிக்கு ஷமியை தூக்கிய ஹைதராபாத்!

ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…

12 hours ago

10 நிமிடத்த்தில் வரலாற்றை மாற்றினார் ‘ரிஷப் பண்ட்’! ரூ.27 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது லக்னோ!

ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…

12 hours ago