ரங்கசாமி ஆட்சிக்கு ஆபத்தா..? பாஜகவின் பலம் 9 ஆக உயர்வு..!
புதுச்சேரியில் சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமித்துள்ளது.
30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.
ஆனால், புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இந்நிலையில், புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்துள்ளது. அந்த 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் பாஜகவை சேர்ந்த வெங்கடேசன், ராமலிங்கம், அசோக்பாபு ஆகிய மூன்று பேரை எம்.எல்.ஏ.வாக நியமனம் செய்து நேற்று உத்தரவு வெளியானது.
இதனால், தற்போது புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் 9 ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக புதுச்சேரி அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காரணம் சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 9 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இரு கட்சிக்கு கிட்டத்தட்ட 1 எம்.எல்.ஏ தான் வித்தியாசம் என்பதால், 6 சுயேட்சை எம்.எல்.ஏக்கள் உள்ளதால் சுயேட்சை எம்.எல்.ஏக்கள் எந்த பக்கமும் வேண்டுமானாலும் செல்லலாம்.
புதுச்சேரியில் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு மீது நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் நியமன எம்.எல்.ஏக்கள் வாக்களித்து ஆட்சியை என்.ஆர்.காங்கிரஸ்,பாஜக மற்றும் அதிமுக அணி கவிழ்த்தது என்பது குறிப்பிடத்தக்கது.