புதுச்சேரியில் பரபரப்பு.., பாஜகவின் பலம் 12 ஆக அதிகரிப்பு..!

Default Image

இன்று  சுயேச்சை எம்எல்ஏக்கள் 2 பேர் பாஜகவிற்கு ஆதரவு தந்ததால் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது.

30 தொகுதிகளை கொண்ட புதுச்சேரியில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை  தேர்தலில் ரங்கசாமி தலைமையிலான என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும், திமுக 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும், 6 சுயேட்சைகள் வெற்றி பெற்றனர்.

ஆனால், புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி ஆட்சியமைத்தது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரி சட்டசபைக்கு 3 நியமன எம்.எல்.ஏக்களை மத்திய அரசு நியமனம் செய்தது. 3 நியமன எம்.எல்.ஏக்களும் பாஜகவை சேர்ந்தவர்கள் இதனால், முதலில் பாஜகவின் பலம் 9 ஆக உயர்ந்தது.

கடந்த 7-ஆம் தேதி முதலமைச்சராக ரங்கசாமி பதவியேற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து இன்று சட்டமன்ற உறுப்பினர்கள் முறைப்படி பதவி ஏற்றுக் கொண்டனர். சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். இந்நிலையில், இன்று  காலை திருபுவனை சுயேச்சை வேட்பாளர் அங்காளன் பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல்குமார் சந்தித்து பாஜகவிற்கு ஆதரவு தந்தார்.

இவரை தொடர்ந்து மற்றோரு சுயேச்சை வேட்பாளர் உழவர்கரை எம்எல்ஏ சிவசங்கரனும் பாஜகவிற்கு ஆதரவு தந்ததால் பாஜகவின் பலம் 12 ஆக அதிகரித்துள்ளது. இதனால், தற்போது பாஜகவில் வெற்றிபெற்ற 6 எம்எல்ஏக்கள், 3 நியமன எம்எல்ஏக்கள், 3 சுயேச்சை எம்எல்ஏக்கள் உள்ளனர்.

புதுச்சேரி சட்டசபையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ளதால் புதுச்சேரி அரசியலில் எந்த நேரத்திலும் எது வேண்டுமானாலும் நடக்கலாம். காரணம் சட்டசபையில் என்.ஆர். காங்கிரஸுக்கு 10, பாஜகவுக்கு 12  எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்