தெலுங்கானாவில் பறக்கும் படையின் சோதனையில் பாஜகவிற்கு சொந்தமான ரூ.8 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் 7 கட்டமாக மக்களவை தேர்தல் நடைபெற உள்ளது. முதல் கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ஆம் தேதி, இரண்டாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 18 -ஆம் தேதி, மூன்றாம் கட்ட தேர்தல் ஏப்ரல் 23-ஆம் தேதி, நான்காம் கட்ட தேர்தல் ஏப்ரல் 29-ஆம் தேதி,ஐந்தாம் கட்ட தேர்தல் மே 6-ஆம் தேதி,ஆறாம் கட்ட தேர்தல் மே 12-ஆம் தேதி,ஏழாம் கட்ட தேர்தல் மே 26-ஆம் தேதி நடைபெற உள்ளது.
இந்தியா முழுவது தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது .இந்நிலையில் முக்கிய தேசிய கட்சிகளான பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே இந்த தேர்தலில் கடும் போட்டி நிலவியுள்ளது.இரு கட்சிகளும் வேட்பாளர் பட்டியலை ஏற்கனவே அறிவித்து விட்டது.
அதேபோல் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே தேர்தல் ஆணையம் அதன் பணிகளை முழு வீச்சில் செய்து வருகின்றது.குறிப்பாக பறக்கும் படை ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பொருட்களை பறிமுதல் செய்து வருகின்றது.
கிருஷ்ண சாகர் ராவ் தெலங்கானா மாநில பாஜகவின் செய்தித் தொடர்பாளராக இருப்பவர் ஆவார்.இந்நிலையில் பாஜக மாநில அலுவலக வங்கிக் கணக்கில் இருந்து அவரது வங்கிக் கணக்குக்கு பணம் பரிமாறப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.முதலில் ஒரு காரை சோதனையிட்ட போலீசார் அதில் இருந்து ரூ.2 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த காரில் இருந்தவர்கள் அளித்த தகவலின்படி , வங்கி அருகாமையில் இருந்தவர்களிடம் இருந்து ரூ.6 கோடி பணத்தை பறிமுதல் செய்தனர். பாஜகவிற்கு சொந்தமான ரூ.8 கோடி பணத்தை ஹைதராபாத்தில் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
சென்னை : சென்னை அடையாறு முத்தமிழ் பேரவை சிவாஜி நினைவிடம் அருகே, திராவிட இயக்கத் தமிழர் பேரவை நடத்தும் "திராவிடமே…
சென்னை : கடந்த மாதம் 27-ல் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் தவெக கட்சியின் முதல் மாநாடு நடைபெற்றது. தவெக வெற்றிக்…
கோவை : முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் திமுக செய்தி தொடர்பாளருமான கோவை செல்வராஜ் (66) மாரடைப்பால் இன்று காலமானார். திருப்பதியில்…
சென்னை : நடிகர் சிவகார்த்திகேயன் நடித்திருக்கும் 'அமரன்' திரைப்படத்தில் இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிப்பதாக குற்றச்சாட்டை முன்வைத்து எஸ்டிபிஐ கட்சியினர், கோவை,…
ஐரோப்பா : மறைந்த பிரிட்டன் அரசி எலிசபெத் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் அவர் பயன்படுத்திய பொருட்கள் பிரமாண்ட விலைக்கு ஏலத்தில்…
சென்னை : நடிகர் சூர்யாவின் “கங்குவா” படத்தை வெளியிடத் தடையில்லை என ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. ரூ.55 கோடி ரூபாயை வழங்காமல்…