ஒடிசா முதலமைச்சராக பாஜகவைச் சேர்ந்த மோகன் சரண் மாஜீ பதவியேற்பு !!
ஒடிசா: ஒடிசா மாநிலத்தில், மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடைபெற்றது. இந்த தேர்தலில் மாநிலப்பேரவையின் 147 இடங்களிலும் தேர்தலானது நடைபெற்றது. இதில் 78 இடங்களை கைப்பற்றி பாஜக தனி பெருபான்மையுடன் முதல் முறையாக ஒடிசாவில் ஆட்சி அமைத்துள்ளது.
அதனை தொடர்ந்து மத்திய அமைச்சர்களின் கூட்டமானது புவனேசுவரத்தில் நேற்றைய நாள் (ஜூன்-11) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஒரு மனதாகவே முதல்வராக மோகன் சரண் மாஜி தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேலும், கியோஞ்சர் தொகுதியில் இருந்து சட்டப்பேரவைக்கு தேர்வான சரண் மாஜீ பழங்குடியின சமூகத்தை சேர்ந்தவர் ஆவார். தற்போது இவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று ஒடிசாவில் 15-வது முதல்வராக தேர்வாகி இருக்கிறார்.
இவரை தொடர்ந்து கே.வி.சிங் தேவ், பிரவதி பரிதா ஆகிய இருவர் துணை முதல்வர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். மேலும்,
சட்டப்பேரவை பாஜக குழு தலைவராகத் தேர்வு செய்யப்பட்டதையடுத்து, ஒடிசா ஆளுநரான ரகுபர் தாஸை சந்தித்து மோகன் சரண் மாஜீ ஆட்சியமைக்க உரிமை கோரினார், அதன் பின் ஆளுநரும் அவருக்கு ஆட்சியமைக்க முறைப்படி அழைப்பு விடுத்திருந்தார்.