திரிபுரா, நாகாலாந்தில் பாஜக முன்னிலை மேகாலயாவில் கடும் போட்டி
திரிபுரா, மேகாலயா, நாகாலாந்து ஆகிய மாநிலங்களில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காலை 8 மணிக்கு தொடங்கி முடிவுகள் வெளியாகி வருகின்றன.
மூன்று மாநிலங்களில் உள்ள 178 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 16 மற்றும் 27 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.
நாகாலாந்தில் 60 இடங்கள் உள்ள நிலையில், ஒரு தொகுதியில் (அகுலுடோ) பாரதிய ஜனதா போட்டியின்றி வெற்றி பெற்றதால், 59 இடங்களில் தேர்தல் நடத்தப்பட்டது.மேகாலயாவிலும், ஒரு தொகுதியில் தேர்தல் ரத்து செய்யப்பட்டதால், மொத்த எண்ணிக்கை 60ல் இருந்து 59 ஆக குறைந்துள்ளது.
திரிபுரா: திரிபுராவில் பாஜக 35 இடங்களில் முன்னிலை வகிக்கிறது காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கூட்டணி 14 இடங்களில் முன்னிலை மற்றும் திப்ரா மோதா கட்சி 6 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
நாகாலாந்து: பாஜக 47 இடங்களில் முன்னிலை வகிக்கிறது நாகா மக்கள் முன்னணி 3 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
மேகாலயா: தேசிய மக்கள் கட்சி 22 இடங்களிலும் திரிணாமுல் காங்கிரஸ் 10 இடங்கள் மற்றும் பாஜக 8 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.