வருகின்ற 21-ம் தேதி மகராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை 24 -ம் தேதி எண்ணப்படுகிறது. இதற்காக அனைத்து கட்சிகளும் அறிக்கைகள் மற்றும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக இன்று தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இந்த அறிக்கையை பாஜகவின் செயல் தலைவர் ஜெ.பி நாட்டா வெளியிட்டார். அவர்கள் வெளியிட்ட அந்த அறிக்கையில் மகாராஷ்டிர மாநிலத்திலுள்ள ஒரு கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கித் தருவதாகவும் , மகாராஷ்டிர மாநிலத்தை வறட்சியில் இருந்து காக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் கூறினர்.
மேலும் ஜோதிபா பூலே , சாவித்திரிபாய் பூலே மற்றும் சாவர்க்கர் உள்ளிட்ட தலைவர்களுக்கு உயரிய விருதான பாரத ரத்னா விருது கொடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர். சாவர்க்கர் நாட்டின் விடுதலைக்காக போராடிய முக்கிய தலைவர்களில் ஒருவர் ஆவார்.
சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…
சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது. எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…
சென்னை : அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…
மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…
டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…
சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…