மிரட்டல் தந்திரங்கள் மூலம் பணிய வைக்கும் பாஜக முயற்சி பலிக்காது – தெலுங்கானா முதல்வர் மகள்
ஒரு போதும் மக்கள் விரோத ஆட்சிக்கு முன் பணிந்ததில்லை என்பதை நினைவூட்டுகிறேன் என தெலுங்கானா முதல்வர் மகள் அறிக்கை.
அமலாக்கத்துறை சம்மன்:
டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு தொடர்பாக பி.ஆர்.எஸ் தலைவரும் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளுமான கே.கவிதா நாளை டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை தலைமையகத்தில் ஆஜராகி தனது வாக்கு மூலத்தைப் அளிக்க வேண்டும் என்று அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. கடந்த டிசம்பர் 12ம் தேதி ஹைதராபாத்தில் தெலுங்கானா முதல்வர் கே.சந்திரசேகர் ராவின் மகளான கே.கவிதாவிடம் சிபிஐ அதிகாரிகள் ஏழு மணி நேரத்திற்கும் மேல் விசாரணை நடத்தியிருந்த நிலையில், சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
மகளிர் இடஒதுக்கீடு மசோதா:
இந்த நிலையில், டெல்லி அமலாக்கத்துறை சம்மன் குறித்து பாரதிய ராஷ்டிரிய சமிதி (பிஆர்எஸ்) எம்எல்சி கவிதா அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. அரசியல் பங்கேற்பில் பெண்களுக்கு உரிய பங்களிப்பை வழங்கும் வகையில் அதை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் என்பதே எங்களின் ஒரே கோரிக்கை.
உண்ணாவிரதப் போராட்டம்:
பாஜக அரசை மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை அறிமுகப்படுத்தி நிறைவேற்றக் கோரி, நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் மற்றும் பெண்கள் அமைப்புகளுடன் இணைந்து மார்ச் 10-ஆம் தேதி ஜந்தர் மந்தரில் ஒரு நாள் அமைதியான உண்ணாவிரதப் (பாரத் ஜக்ருதி) போராட்டம் நடைபெற உள்ளது. இந்த நிகழ்வு தெரியவந்ததும், மார்ச் 9 ஆம் தேதி டெல்லியில் தலைமையகத்தில் ஆஜராகுமாறு அமலாக்க இயக்குநரகம் எனக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
முழு ஒத்துழைப்பு அளிப்பேன்:
சட்டத்தை மதிக்கும் குடிமகன் என்ற முறையில், விசாரணை நிறுவனங்களுக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பேன். இருப்பினும், தர்ணா மற்றும் முன்னொட்டு நியமனங்கள் காரணமாக, அதில் கலந்துகொள்ளும் தேதி குறித்து சட்டப்பூர்வ கருத்துக்களைப் பெறுவேன். எங்கள் தலைவரான முதல்வர் கே.சி.ஆரின் போராட்டத்துக்கும், ஒட்டுமொத்த பி.ஆர்.எஸ் கட்சிக்கும் எதிரான இந்த மிரட்டல் உத்திகள் எங்களை தடுக்காது என்பதை மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு தெரிவிக்கிறேன்.
பாஜக முயற்சி பலிக்காது:
கே.சி.ஆர். தலைமையில், உங்கள் தோல்விகளை அம்பலப்படுத்தவும், நாட்டிற்காக பிரகாசமான மற்றும் சிறந்த எதிர்காலத்திற்காக குரல் எழுப்பவும் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். டெல்லியில் உள்ள அதிகார வெறியர்களுக்கு, தெலுங்கானா ஒரு போதும் மக்கள் விரோத ஆட்சிக்கு முன் பணிந்ததில்லை, பாஜக அரசின் முயற்சி பலிக்காது என்பதையும் நினைவூட்டுகிறேன் என்றும் மக்களின் உரிமைகளுக்காக அச்சமின்றி கடுமையாகப் போராடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.
తెలంగాణ తల వంచదు
Ahead of our March 10 dharna along with the opposition parties and women organisations demanding the Women’s Reservation Bill at Jantar Mantar, I have been summoned by the ED on March 9th.
My statement : pic.twitter.com/DWbNuNNpnP
— Kavitha Kalvakuntla (@RaoKavitha) March 8, 2023