ஒரு வருடத்தில் பாஜக சொத்து மதிப்பு ரூ.1,483 கோடி ; 22சதவீதம் உயர்வு!
பாஜக , காங்கிரஸ் , பகுஜன் சமாஜ் போன்ற ஏழு தேசிய கட்சிகளின் சொத்து தொடர்பாக ஏ டி ஆர் என்ற அமைப்பு ஆய்வை செய்தது . அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2016 2017 ஆம் நிதியாண்டில் 7 தேசிய கட்சிகளின் மொத்த சொத்து மதிப்பு ரூ.3456.65 கோடியாக இருந்தது.
2017 2018 ஆம் ஆண்டு நிதியாண்டில் 6 சதவீதம் அதிகரித்து ரூ.3260.81 கோடியாக அதிகரித்தது. 2017-ம் ஆண்டில் ரூ.1213.13 கோடியாக இருந்த பாஜகவை சொத்து மதிப்பு 2018 ஆம் ஆண்டு ரூ.1483.35 கோடியாகி 22 சதவீதம் உயர்ந்தது.
அதே சமயத்தில் காங்கிரஸின் சொத்து மதிப்பு 2017 ஆம் ஆண்டு ரூ.854.75 கோடியாக இருந்தது. பின்னர் 2018 ஆம் ஆண்டு ரூ.724.35 கோடியாக குறைந்தது. ஒரு ஓராண்டில் 15.26 சதவீதம் குறைந்துள்ளது.