Rahul - Modi [file image]
இடைத்தேர்தல் முடிவுகள் : நாடு முழுவதும் 7 மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்று முடிந்த இடைதேர்தலில் வாக்கு எண்ணிக்கையின் அதிகாரபூர்வ முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த இடைத்தேர்தலில் இந்தியா கூட்டணி 10 இடங்களை கைப்பற்றியுள்ளது. ஆனால், வெறும் இரண்டே இடங்களில் மட்டும் பாஜக வெற்றி பெற்றிருக்கிறது.
அதன்படி, மத்தியபிரதேச மாநிலம் அமர்வாரா தொகுதி இடைத்தேர்தலில் 3,027 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். மேலும், இமாச்சல்பிரதேசத்தில் உள்ள ஹமிர்பூர் தொகுதியிலும் பாஜக வெற்றி பெற்றது.
ஆனால், தமிழ்நாட்டின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், பஞ்சாப்பில் ஒரு இடத்தில் ஆம் ஆத்மியும், மேற்குவங்கத்தில் 4 தொகுதிகளில் திரிணாமூல் காங்கிரஸ் வென்றுள்ளன. இதேபோல, இமாச்சலில் 2 தொகுதிகளில் காங்கிரஸ், உத்தராகண்டில் 2 இடத்தில் காங்கிரஸ்,பீகாரில் சுயேச்சை வேட்பாளரும் வெற்றி பெற்றுள்ளனர்.
இடைத்தேர்தல் என்றால் ஆளும் கட்சிக்கு சாதகமான சூழல் இருக்கும். ஆனால், அந்த நிலையை மாற்றி, பாஜகவை வீழ்த்தி காங்கிரஸ் வெற்றிபெற்றுள்ளது. ஆம், பாஜக ஆளும் உத்தராகண்ட் மாநிலத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 2 தொகுதிகளில் காங்கிரஸ், அபார வெற்றிபெற்றுள்ளது. அதேபோல், மேற்குவங்கத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக வசம் இருந்த 3 தொகுதிகள் உட்பட 4 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் அபார வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் லக்னோ கிரிக்கெட் மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ் அணியும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையிலான…
ஸ்ரீநகர் : இன்று பிற்பகல் 3 மணி அளவில் ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்திற்கு சுற்றுலா சென்ற பயணிகள் மீது…
பஹல்காம் : ஜம்மு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டம், பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சுற்றுலா பயணிகள் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்…
சென்னை : நடிகர் அஜித்குமார் சினிமா, நடிப்பை தாண்டி கார் பந்தயத்திலும் மிகுந்த ஆர்வத்துடன் பங்கேற்று வருகிறார். ஏற்கனவே அஜித்குமார்…