கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான் மற்றும்தெலுங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன. இதில், பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது. ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் இன்று மாலை ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அவரது இல்லத்தில் கொடுத்தார்.
அசோக் கெலாட்கூறுகையில், “புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாங்கள் கடினமாக உழைத்தாலும் வெற்றி பெறவில்லை, அரசாங்கத்திற்கு வந்த பிறகு அவர்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் ராஜஸ்தானுக்கு நாங்கள் வழங்கிய வளர்ச்சியின் வேகம் உட்பட அனைத்து திட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.
ராஜஸ்தானில் பாஜக 114 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 1 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 199 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை எண்ணிக்கை 100 ஆகும்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…