பாஜக வெற்றி.. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த அசோக் கெலாட்..!

கடந்த மாதம் நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தலில் சத்தீஸ்கர், மத்திய பிரததேசம், ராஜஸ்தான் மற்றும்தெலுங்கானா ஆகிய 4 மாநில தேர்தல் முடிவுகள் இன்று வெளியாகி வருகின்றன.  இதில், பாஜக பெரும்பான்மை பலத்தைப் பெற்று ராஜஸ்தானில் ஆட்சியை பிடித்தது.  ராஜஸ்தான் சட்டசபை தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதையடுத்து, ராஜஸ்தான் முதல்வர் பதவியை அசோக் கெலாட் இன்று மாலை ராஜினாமா செய்தார். ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநர் கல்ராஜ் மிஸ்ராவிடம் அவரது இல்லத்தில் கொடுத்தார்.

அசோக் கெலாட்கூறுகையில், “புதிய அரசுக்கு எனது வாழ்த்துக்கள். அவர்களுக்கு எனது அறிவுரை என்னவென்றால், நாங்கள் கடினமாக உழைத்தாலும் வெற்றி பெறவில்லை, அரசாங்கத்திற்கு வந்த பிறகு அவர்கள் இந்த ஐந்து ஆண்டுகளில் ராஜஸ்தானுக்கு நாங்கள் வழங்கிய வளர்ச்சியின் வேகம் உட்பட அனைத்து திட்டங்களையும் அவர்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்” என தெரிவித்தார்.

ராஜஸ்தானில் பாஜக 114 இடங்களில் வெற்றி பெற்று தற்போது 1 இடங்களில் முன்னிலையில் உள்ளது. ராஜஸ்தானில் 199 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. அதில் பெரும்பான்மை எண்ணிக்கை 100 ஆகும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்