துப்பாக்கி குண்டு வெடித்து கொரோனாவுக்கு எதிராக விளக்கேற்றிய பா.ஜா.க மகளிரணி தலைவி!
சீனாவில் உருவாகி இருந்தாலும் தற்பொழுது பல நாடுகளை ஆக்கிரமித்து இந்தியாவையும் விட்டுவைக்காமல் பல்லாயிரக் கணக்கானோரை பாதித்துள்ள வைரஸ் தான் கொரோனா. இந்த வைரஸால் இந்தியாவில் மட்டும் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். 120க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி, நேற்று முன்தினம் இந்திய மக்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், அனைவரும் இரவு 9 மணிக்கு மின் விளக்குகளை அணைத்து 9 நிமிடங்கள் விளக்குகளை ஏற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தார். அதன்படி பலர் மின்விளக்குகளை அணைத்து கோரிக்கையை நிறைவேற்றினர்.
அதன் தீவிரம் அறியாத சிலர் அதை விளையாட்டாக எண்ணி மறுத்து விட்டனர். ஆனால், இந்நிலையில் தற்போது பாஜக கட்சியின் மகளிர் அணி தலைவி ஆகிய மஞ்சு திவாரி இந்த விளக்கேற்றும் நிகழ்வுக்கு கைத்துப்பாக்கி வைத்து வானை நோக்கி சுட்டு, அந்த வீடியோவை தனது சமூக வலைதளப் பக்கங்களிலும் பதிவேற்றியுள்ளார்.
இந்த வீடியோ பலரை காயப்படுத்தி உள்ள நிலையில், கொரோனா வைரஸால்பாதிக்கப்பட்ட குடும்பங்களின் மீளா துயரத்தை அறியாமல் இவர் இவ்வாறு செய்ததற்கு கண்டனங்கள் எழுந்துள்ளது. ஆளும் கட்சியை சேர்ந்த இவரே இப்படி செய்தது பலரது விமர்சனங்களையும் தூண்டியுள்ளது. இந்நிலையில், தற்போது இதுதொடர்பாக இந்த மகளிர் அணி தலைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.