கடந்த 2017-ம் ஆண்டு மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் 60 இடங்களில் 21 இடங்களை கைப்பற்றி பாஜக, சுயேச்சைகள் மற்றும் பிற கட்சி எம்எல்ஏக்கள் உதவியுடன் பாஜக மணிப்பூரில் ஆட்சியை பிடித்தது. இதைத்தொடர்ந்து, மணிப்பூர் சட்டசபையில் காங்கிரஸ் கட்சிக்கு 24 எம்.எல்.ஏக்களும், ஆளும் பாஜக கூட்டணி கட்சி மற்றும் சபாநாயகரையும் சேர்த்து 29 எம்.எல்.ஏக்களும் உள்ளனர்.
இந்நிலையில், பாஜகவை சேர்ந்த 3 எம்எல்ஏக்கள் காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர். மேலும், பாஜகவிற்கு கொடுத்த ஆதரவை தேசிய மக்கள் கட்சி 4 எம்எல்ஏக்களும், ஒரு சுயேச்சை மற்றும் திரிணமூல் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் வாபஸ் பெற்றனர். பின்னர், உள்துறை அமைச்சரை சந்தித்து பேசிய எம்எல்ஏக்கள் பிறகு தங்கள் ஆதரவை அரசுக்கு கொடுப்பதாக கூறினார்கள்.
ஆனால், பாஜக அரசுக்கு போதிய பெரும்பான்மை இல்லை எனக்கூறி காங்கிரஸ், பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தது. அதன்படி மணிப்பூர் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறுகிறது. தங்கள் கட்சி எம்எல்ஏக்கள் அனைவரும் சட்டப்பேரவைக் கூட்டத்தில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கொறடா உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், நேற்று நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் முதல்வர் பைரோன்சிங்குக்கு ஆதரவாக 28 வாக்குகளும், எதிராக 16 வாக்குகளும் கிடைத்தது. நேற்று காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : நேற்று முன்தினம் (ஏப்ரல் 22) காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
பெங்களூரு : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும், ரியான் பராக் தலைமையிலான…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையான தொடர் 'தடை' நடவடிக்கைகள் இரு நாட்டு…
டெல்லி : காஷ்மீர் பஹல்காம் பகுதி பயங்கரவாத தாக்குதலை அடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,…