உ.பியில் பாஜக சாதனை காரணமாக 403 இடங்களில் 325 இடங்களில் வெற்றி பெறும்- யோகி ஆதித்யநாத்..!

Default Image

2022 உ.பி. சட்டமன்ற தேர்தலில் மொத்தமுள்ள 403 இடங்களில் பாஜக குறைந்தபட்சம் 325 இடங்களில் வெற்றி பெறும் என யோகி ஆதித்யநாத் கூறினார்.

அடுத்த ஆண்டு உ.பி.சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் இன்று தனியார் செய்தி நிறுவனத்திடம் உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பிரத்தியேகமாகப் பேசியுள்ளார். அதில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெறும் தேர்தலில் நாட்டின் அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலத்தில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று கூறினார்.பாஜக தனது பணி மற்றும் சாதனை காரணமாக அடுத்த தேர்தலில் அமோக வெற்றியைப் பெற முடியும்.

மேலும் பாஜக மீண்டும் மாநிலத்தில் ஆட்சி அமைக்கும். அதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டாம். உத்திரப்பிரதேச சட்டப் பேரவையில் மொத்தமுள்ள 403 இடங்களில் ஆளும் கட்சி குறைந்தபட்சம் 325 இடங்களையாவது கைப்பற்றும். உத்தரப் பிரதேசத்தை எப்படி நடத்த வேண்டும் என்பதை பாஜக அரசு கடந்த 5 ஆண்டுகளில் காட்டியிருக்கிறது என்றார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் உத்தரபிரதேசத்தில் ஒரு அரசாங்கம் எவ்வாறு செயல்பட வேண்டும். அரசின் கொள்கைகளின் பலன்கள் எவ்வித பாகுபாடுமின்றி சமூகத்தின் அனைத்துப் பிரிவினரையும் சென்றடைய வேண்டும் என்பதை நாங்கள் பார்த்தோம். மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி இருக்க வேண்டும் என்பதை பாஜக அரசு காட்டியுள்ளது. இரட்டை எஞ்சின் ஆட்சியின் பலன்கள் என்ன என்பதை, மத்தியில் மோடி அரசும், உத்தரபிரதேசத்தில் யோகி அரசும் சிறந்த முறையில் காட்டியுள்ளன என்று முதல்வர் கூறினார்.

அரசின் சாதனைகளை வைத்து மக்களிடம் வாக்கு கேட்போம். கிராமங்கள் முழுவதும் உள்ள மக்கள் தங்களுக்கு ரேஷன், சிலிண்டர், மின்சாரம் இணைப்புகள், கல்வி வசதிகள் மேம்பட்டுள்ளன என்று கூறுகிறார்கள். இவை அனைத்தும் உத்தரபிரதேச அரசின் சாதனைகள் இந்த சாதனைகளின் அடிப்படையில் நாங்கள் மக்களிடம் வெற்றி பெறுவோம்  என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்