கங்குலி போல பா.ஜ.க சிக்சர் அடிக்கும்.., ராஜ்நாத் சிங் பேச்சு..!

நிச்சயமாக நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் விளாசி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க தேர்தலை அடுத்து பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், இன்று பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மேற்கு வங்காளத்தின் தாஸ்பூரில் உரையாற்றியபோது, வங்காளத்தில் பொதுமக்களுக்கு வரும் பணத்தில் 15% -25% ஊழல்நடைபெறுகிறது. சாலை அமைக்க மட்டுமே மோடி ரூ.25,000 கோடி வழங்கினார். அந்த பணம் எங்கே, எத்தனை சாலைகள் போடப்பட்டன.? மேற்கு வங்கம் வேகமாக பின்தங்கிய நிலையில் உள்ளது, இதற்கு மம்தா பொறுப்பு.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கிரீஸை கடக்கும் போதெல்லாம், அவர் ஒரு சிக்ஸர் அடிப்பார் என்பது உறுதி அதேபோல், மக்களவையில் உங்கள் ஆதரவோடு, நாங்கள் கிரீஸை தாண்டிவிட்டோம், நிச்சயமாக நாங்கள் சட்டமன்றத் தேர்தலில் சிக்ஸர் விளாசி மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சியமைக்கும் என ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு விவசாயின் கணக்கிற்கும் ரூ.6000 பாய் அனுப்பினோம். இந்த பணத்தை கொடுக்க இங்குள்ள விவசாயிகளின் பட்டியலை மம்தா எங்களுக்கு வழங்கவில்லை. பாஜக அரசு இங்கு அமைக்கப்பட்டால், உங்கள் ரூ.6000 முன்கூட்டியே உங்கள் கணக்கில் செலுத்தப்படும். அனுதாபம் சம்பாதிப்பதற்காக மட்டுமே மம்தா காயமடைந்ததாக பாதுகாப்புத்துறை அமைச்சர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
ரெடியா இருத்துக்கோங்க.., சேப்பாக்கத்தில் சென்னை – கொல்கத்தா மோதல்.! இன்று டிக்கெட் விற்பனை.!
April 7, 2025
”ஆங்கிலத்தில் கையெழுத்திடும் தமிழக அமைச்சர்கள்”.., தமிழில் போடக்கூடாதா? பிரதமர் மோடி கேள்வி.!
April 6, 2025