பாஜக தொண்டர்கள் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது தாக்குதல்
அனைத்து மாநிலங்களிலும் மக்களவை தேர்தல் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மக்கள் அனைவரும் உற்சாகமாகவும் வாக்களித்து வருகின்றனர். இந்நிலையில், உத்திரபிரதேசத்தின் மொராதாபாத் தொகுதியில் வாக்குச்சாவடி அதிகாரிகள் மீது பாஜக தொண்டர்கள் தாக்குதல் நடத்தினர்.
இந்நிலையில், வாக்குச்சாவடி அதிகாரி, சமாஜ்வாதி கட்சியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்குமாறு கூறியதாக, அவருடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து போலீசார் பாஜக தொண்டர்களிடம் இருந்து வாக்குச்சாவடி அதிகாரிகளை அழைத்து சென்றனர்.