திரிபுராவில் முடிவுக்கு வருகிறது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆட்சி..!
வாக்கு எண்ணிக்கை மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு தொடங்கி நடைபெற்றுவரும் நிலையில், எந்தெந்த கட்சிகள் ஆட்சியைப் பிடிக்கப் போகின்றன என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
மேகாலயாவின் 59 தொகுதிகளுக்கும் நாகாலாந்தின் 59 தொகுதிகளுக்கும் கடந்த 27-ந்தேதி தேர்தல் நடந்தது. இதில் மேகாலயாவில் 67 சதவீதமும், நாகாலாந்தில் 75 சதவீதமும் ஓட்டுகள் பதிவானது. திரிபுராவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் ஒருவர் மரணம் அடைந்ததாலும் மேகாலயாவில் தேசியவாத காங்கிரஸ் வேட்பாளர் கொல்லப்பட்டதாலும் தலா ஒரு தொகுதியில் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
நாகாலாந்தை பொறுத்தவரை வடக்கு அங்காமி-2 தொகுதியில் போட்டியிட்ட தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி தலைவர் நெய்பியூ ரியோ போட்டியின்றி வெற்றி பெற்றுவிட்டதால் எஞ்சிய 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.
நாகாலாந்து சட்டப்பேரவை தேர்தல் 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி இன்று காலை துவங்கியது. இதில் என்பிஎப் கூட்டணி 24 இடங்களிலும், பாஜக கூட்டணி 32 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகின்றன. தற்போதைய நிலவரப்படி ஆட்சியை கைப்பற்றுதில் இரு தரப்புக்குக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறதாக கூறப்படுகிறது.
இதேபோல் திரிபுரா சட்டப்பேரவை தேர்தல் 59 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பாஜக கூட்டணி 40 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும்கட்சியான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 19 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. தற்போது ஆட்சியில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது அக்கட்சியினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.