மத கலவரைத்தை தூண்ட முயற்சிக்கும் பிஜேபி…. திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!

Published by
Dinasuvadu desk
பாஜக ரத யாத்திரை நடத்தி மேற்கு வங்கத்தில் மதகலவரத்தை நடத்துவத்தை நோக்க கொண்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத்த யாத்திரையுடன் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 158 இடங்களில் பொதுக்கூட்டம் முடிவு செய்து இருந்தது.இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட ரத யாத்திரைக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு அனுமதி  மறுத்தது.இதனால் தங்களுக்கு ரத யாத்திரை நடத்த அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பிஜேபி.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது உளவுத்துறை சார்பில் ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கபட்டு ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி கிடையாது என மேற்கு வங்க மாநில அரசும் , மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த ரத யாத்திரை தடை உத்தரவை எதிர்த்து பா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து , சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து உடனடியாக விசாரிக்க வேண்டுமென்ற பிஜேபி-யின்  கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு.
ரத யாத்திரை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை  பிஜேபி அணுகியுள்ளது தொடர்பாக  திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்தா சட்டர்ஜி தெரிவிக்கையில் , வருகின்ற  2019ஆம் நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மத கலவரத்தை தூண்ட வேண்டும் என்று ரத யாத்திரை நடத்துகின்றது என்றும் , மக்களை மதரீதியில் பிரிக்கும் முயற்சியில் பா.ஜனதா கட்சி முயற்சி செய்கின்றது என்றும் பா.ஜனதா கட்சியை  கடுமையாக விமர்சித்துள்ளார்.
Published by
Dinasuvadu desk

Recent Posts

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் தேர்தல் ரிசல்ட்… வெற்றியை தக்க வைத்துக்கொண்ட ஜே.எம்.எம்., கூட்டணி!

ஜார்க்கண்ட் : மகாராஷ்டிரா மற்றும் ஜார்க்கண்ட் சட்டப் பேரவைத் தேர்தல்களில் பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதலே எண்ணப்பட்டு…

25 minutes ago

மேற்கு வங்கம்.. 6 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி.!

மேற்கு வங்கம் : மேற்குவங்கத்தில நடந்த இடைத்தேர்தலில் 6 தொகுதிகளிலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ளது. முன்னதாக…

1 hour ago

மகாராஷ்டிரா தேர்தல் வெற்றி! “மக்களுக்கு நன்றி”..பிரதமர் மோடி நெகிழ்ச்சி!!

மும்பை : மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் மாநில சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வந்த  நிலையில்,…

1 hour ago

பீகார் இடைத்தேர்தல் : 4 சட்டமன்ற தொகுதிகளிலும் பாஜக கூட்டணி வெற்றி!

பீகார் : மாநிலத்தில் பெலகஞ்ச், இமாம்கஞ்ச், ராம்கர் மற்றும் தராரி ஆகிய நான்கு தொகுதிகளின் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. தராரி…

2 hours ago

“நாடாளுமன்றத்தில் வயநாட்டு மக்களின் குரலாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” – பிரியங்கா காந்தி!

கேரளா : கேரளாவின் வயநாடு எம்.பி. பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை அடுத்து, அங்கு அவரது தங்கை கேரளா…

2 hours ago

“என்ன நண்பா ஹப்பியா”… நிர்வாகிகளுக்கு த.வெ.க தலைவர் விஜய் கொடுத்த நினைவு பரிசு!

சென்னை : தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் முதல் மாநாடு பிரமாண்டமாகக் கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம்…

3 hours ago