மத கலவரைத்தை தூண்ட முயற்சிக்கும் பிஜேபி…. திரிணாமுல் காங்கிரஸ் கடும் விமர்சனம்..!!
பாஜக ரத யாத்திரை நடத்தி மேற்கு வங்கத்தில் மதகலவரத்தை நடத்துவத்தை நோக்க கொண்டுள்ளதாக திரிணாமுல் காங்கிரஸ் கூறியுள்ளது.
2019ஆம் ஆண்டு நடைபெற இருக்கின்ற பாராளுமன்ற தேர்தலை குறிவைத்து மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் ரத யாத்திரை நடத்த பாஜக திட்டமிட்டுள்ளது. இந்த ரத்த யாத்திரையுடன் மேற்கு வங்க மாநிலம் முழுவதும் 158 இடங்களில் பொதுக்கூட்டம் முடிவு செய்து இருந்தது.இந்நிலையில் பாரதீய ஜனதா கட்சி நடத்த திட்டமிட்ட ரத யாத்திரைக்கு மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசு அனுமதி மறுத்தது.இதனால் தங்களுக்கு ரத யாத்திரை நடத்த அனுமதி வேண்டி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது பிஜேபி.
இந்த வழக்கு ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்த போது உளவுத்துறை சார்பில் ரத யாத்திரை நடக்கும் இடங்களில் பெரும் வன்முறை சம்பவங்கள் நடக்க வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுக்கபட்டு ரத யாத்திரைக்கு அனுமதி அளிக்கக் கூடாது தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பாஜக ரதயாத்திரைக்கு அனுமதி கிடையாது என மேற்கு வங்க மாநில அரசும் , மாநில ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்நிலையில் உயர்நீதிமன்றத்தின் இந்த ரத யாத்திரை தடை உத்தரவை எதிர்த்து பா.ஜனதா கட்சி சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்து , சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கை அவசர வழக்காக எடுத்து உடனடியாக விசாரிக்க வேண்டுமென்ற பிஜேபி-யின் கோரிக்கையை நிராகரித்தது சுப்ரீம் கோர்ட்டு.
ரத யாத்திரை தொடர்பாக உச்சநீதிமன்றத்தை பிஜேபி அணுகியுள்ளது தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் பார்தா சட்டர்ஜி தெரிவிக்கையில் , வருகின்ற 2019ஆம் நடக்கவுள்ள தேர்தலை முன்னிட்டு மேற்கு வங்க மாநிலத்தில் பாஜக மத கலவரத்தை தூண்ட வேண்டும் என்று ரத யாத்திரை நடத்துகின்றது என்றும் , மக்களை மதரீதியில் பிரிக்கும் முயற்சியில் பா.ஜனதா கட்சி முயற்சி செய்கின்றது என்றும் பா.ஜனதா கட்சியை கடுமையாக விமர்சித்துள்ளார்.