கார்ப்பரேட் நிறுவனங்களில் நன்கொடை பெற்ற அரசியல் கட்சிகள் பட்டியல் – ஏடீஆர் அமைப்பு வெளியீடு!!
கார்ப்பரேட் நிறுவங்களிடமிருந்து நன்கொடை பெற்றதில் இந்தியாவிலுள்ள 7 தேசியக் கட்சிகளில் பாரதிய ஜனதா கட்சி முதலிடம் பெற்றுள்ளது. ஒட்டுமொத்த நன்கொடைகளில் 94 சதவிகிதம் இடத்தை பாஜக பெற்றுள்ளது.
ஏடீஆர் என்னும் தனியார் அமைப்பு அரசியல் கட்சிகள் பெரும் நன்கொடை குறித்து தகவல்களை சேகரித்து வருகிறது. அந்த அறிக்கையின் படி, 2016 முதல் 2018 ம் ஆண்டு வரை கார்ப்பரேட் நிறுவனங்களிடம் இருந்து மொத்தமாக 985.18 கோடி ரூபாய் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது.அதில் பாஜக மட்டும் 1731 நிறுவங்களிடமிருந்து 915.596 கோடி ரூபாய் நன்கொடை பெற்று முதலிடம் பெற்றுள்ளது. இரண்டாவதாக காங்கிரஸ் கட்சி 151 நிறுவனங்களிடமிருந்து 55.36 கோடி ரூபாய் நன்கொடையாக பெற்றுள்ளது.
அதே போல், 20000 ரூபாய்க்கு மேல் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் 94 % பாஜக கட்சிக்கு சென்றுள்ளது. இதே பிரிவில் காங்கிரஸ் கட்சிக்கு 84 % நன்கொடை கிடைத்துள்ளது. மேலும் பான் கார்ட் மற்றும் ஆதார் போன்ற அடையாளங்கள் இல்லாமல் நன்கொடை கொடுத்தவர்கள் பட்டியலில் 98 % பாஜக விற்கு சென்றுள்ளது. இந்த நன்கொடை மூலம் பாஜகவிற்கு 2.50 கோடி ரூபாய் கிடைத்துள்ளது.
இந்த பட்டியலில் கடைசி இடத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளது. அவை பெற்ற தொகை வெறும் 4 லட்சம் மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது.