பாஜக மேலிடம் முக்கியத்துவம் தரவில்லை! காங்கிரஸில் இணைகிறார் நடிகை விஜயசாந்தி?

Vijayashanti

தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 119 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு நவம்பர் 30ம் தேதி ஒரே கட்டமாக பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது. சட்டப்பேரவை தேர்தலுக்காக 35,356 வாக்குச்சாவடிகள் அமைக்கப்படும் என்றும் தெலுங்கனாவில் 3.17 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்த 5 மாநிலங்களில் பதிவாகும் வாக்குகள் டிச.3ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. தெலுங்கானாவில் தற்போது கேசிஆரின் பிஆர்எஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. ஆந்திராவில் இருந்து தெலுங்கானா தனி மாநிலமாகப் பிரிக்கப்பட்டது முதலே அங்கே பிஆர்எஸ் கட்சி தான் ஆட்சியில் இருக்கிறது. அக்கட்சித் தலைவர் கே.சி.ஆர். முதல்வராக இருக்கிறார்.

கடந்த 2014 மார்ச் மாதம் தெலுங்கானா மாநிலத்துக்கான மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டதால் 2014 ஜூன் 2ம் தேதி தெலுங்கானா தனி மாநிலமாக உருவானது. இந்த சமயத்தில் நவம்பர் 30ம் தேதி 3-ஆவது சட்டமன்ற தேர்தலை தெலுங்கானா மாநிலம் சந்திக்கிறது.

ஆளுநர் மதுரை வருகை…! கருப்புக்கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர்…!

இந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரதிய ராஷ்ட்ரி சமிதி, காங்கிரஸ், பாஜக என மும்முனை போட்டியை தெலுங்கானா எதிர்கொள்ளும். தெலுங்கனாவில் மொத்தம் 119 தொகுதிகள் உள்ளன. இம்மாநிலத்தில் பெரும்பான்மைக்கு தேவை 60 இடங்கள். தெலுங்கானா சட்டப்பேரவை தேர்தல் நெருங்குவதால் ஆளும் கட்சி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட பிரதான கட்சிகள் தங்களது வேட்பாளர் பட்டியல், வாக்குறுதிகள் என தேர்தல் பணியில் மும்மரம் காட்டி வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜகவில் உள்ள நடிகை விஜயசாந்தி காங்கிரஸில் இணைவார் என தெலுங்கானா அரசியல் விமர்சகர்கள் கணித்துள்ளனர். தெலுங்கானாவில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கான பாஜக வேட்பாளர் பட்டியலில் விஜயசாந்தி பெயர் இடம்பெறவில்லை. தேர்தலில் போட்டியிட கட்சி வாய்ப்பு வழங்காத நிலையில், விஜயசாந்தி எக்ஸ் தள பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அவரது பதிவில், பிஆர்எஸ் (பாரதிய ராஷ்டிர சமிதி) கட்சியின் செயல்களில் இருந்து தெலுங்கானா மக்களை காப்பாற்ற காங்கிரஸ் போராட வேண்டும். 7 ஆண்டுகள் காங்கிரஸ் எதிர்க்கட்சியாக இருந்தபோது கொடியேற்றியவர் ராமுலம்மா என்று சிலர் சொல்கிறார்கள். சினிமாவில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளேன், ஆனால், அரசியலில் ஏதாவது ஒரு கட்சியில் தான் இருக்க முடியும் என பதிவிட்டுள்ளார்.

சட்டவிரோத பணவரிவர்த்தனை.! அமலாக்கத்துறை முன் ஆஜராகும் அரவிந்த் கெஜ்ரிவால்.!

இந்த பதிவின் மூலம், பாஜகவில் இருந்து விலகும் விஜயசாந்தி காங்கிரஸில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்தியாவின் முன்னணி நடிகையான விஜயசாந்தி, 1998-ல் பாஜகவில் இணைந்தவர். அப்போதே,பாஜகவின் மகளிர் அணி செயலாளர் பதவியும் விஜயசாந்திக்கு கிடைத்தது.

அப்போது, தமிழ்நாட்டில் ஜெயலலிதாவின் தீவிர ஆதரவாளராக அதிமுகவுக்கும் பிரசாரம் செய்தார் விஜயசாந்தி. ஒருகட்டத்தில் தனிக்கட்சி தொடங்கிய விஜயசாந்தி, பின்னரே அப்போதைய டிஆர்எஸ் (இப்போதைய பிஆர்எஸ்) கட்சியில் இணைந்தார். 2009-ல் அக்கட்சியின் மேதக் தொகுதி எம்.பி.யாகவும் வென்றார்.இதையடுத்து 2014-ல் பிஆர்எஸ் கட்சியில் இருந்து விலகி காங்கிரஸில் ஐக்கியமானார்.

இதனைத்தொடர்ந்து, கடந்த 2020-ம் ஆண்டு காங்கிரஸில் இருந்து வெளியேறி மீண்டும் பாஜகவில் இணைந்தார் விஜயசாந்தி. இந்த நிலையில், தற்போது தெலுங்கானா தேர்தல் நடைபெற உள்ள நிலையில், விஜயசாந்திக்கு பாஜக மேலிடம் முக்கியத்துவம் தரவில்லை என கூறப்படுகிறது. இதனால், மீண்டும் பாஜகவில் இருந்து விலகி காங்கிரஸில் இணைய முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்