புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் என்.ஆர் காங்கிரஸ் 10 இடங்களிலும், பாஜக 6 இடங்களிலும் வெற்றி பெற்றது. திமுக மற்றும் சுயேட்சைகள் தலா 6 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றனர். புதுச்சேரியில் ஆட்சியமைக்க 16 இடங்கள் தேவை என்ற நிலையில், என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி 16 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
இதனால், யார் தலைமையில் புதுச்சேரியில் ஆட்சி அமையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இன்று காலை பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா கூறுகையில், தேர்தலில் வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்கள் சேர்ந்து முதல்வர் யார் என்பது குறித்து ஆலோசித்து முடிவு செய்யப்படும் எனவும் புதிய அரசில் பாஜக இடம்பெறும் என தெரிவித்து இருந்தார்.
இதற்கு முன் என்.ஆர் காங்கிரஸ், பாஜக கூட்டணி அமைக்கும்போது ரங்கசாமி தரப்பில் நான்தான் முதல்வர் வேட்பாளர் என கூறினார். ஆனால், பாஜக தரப்பில் தேர்தலில் வெற்றி பெற்று தேர்வு செய்யகூடிய எம்எல்ஏக்கள் தான் யார் முதல்வர் என்று முடிவு செய்வார்கள் என கூறினர். இதனால், புதுச்சேரியில் முதல்வராக தேர்வு செய்வதில் சிக்கல் ஏற்படும் என கூறப்ப்பட்டது.
இதற்கிடையில், இன்று பிற்பகல் என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி தன்னுடைய சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது என்.ஆர் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்டார்.
சட்டமன்ற குழு தலைவராக ரங்கசாமி தேர்வு செய்யப்பட்ட நிலையில் பாஜகவும் ரங்கசாமி முதல்வராக ஆதரவு தெரிவித்தனர். ஆளுநரை சந்தித்து தங்களது ஆதரவு கடிதத்தை பாஜக சட்டமன்ற உறுப்பினர்கள் அளித்தனர். இறுதியாக புதுச்சேரி முதல்வராக என்.ஆர் காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில், புதுச்சேரி ஆளுநரை சந்தித்து ரங்கசாமி ஆட்சியமைக்க உரிமை கோரினார்.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…