தெலங்கானாவில் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில், அனைத்து தொகுதிகளிலும் பா.ஜ.க. தனித்து போட்டியிடும் என அக்கட்சி தலைவர் அமித்ஷா அறிவித்துள்ளார்.
தெலங்கானா மாநிலத்தில் நாளை பிரச்சாரத்தை தொடங்கவுள்ள பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் அமித்ஷா, ஐதராபாத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, தெலங்கானா கட்சி தலைவரும், காபந்து முதலமைச்சருமான சந்திரசேகரராவ் மற்றும் அவரது கட்சி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
ஒரே நாடு ஒரே தேர்தல் என்ற திட்டத்திற்கு சந்திரசேகரராவ் ஆதரவு தெரிவித்ததாகவும், ஆனால், தற்போது தனது நிலையை மாற்றிக்கொண்டு, சிறிய மாநிலத்தில் 2 தேர்தல் நடத்த வழி ஏற்படுத்திவிட்டார் என்றும் குற்றம்சாட்டினார்.
தெலங்கானாவில் அனைத்து தொகுதிகளில் பாரதிய ஜனதா கட்சி போட்டியிடும் என தெரிவித்த அவர், மாநிலத்தில் வலிமையான சக்தியாக பா.ஜ.க. உருவாகும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார். மாநிலத்தை ஆட்சி செய்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால், வாக்கு வங்கி அரசியல் மீண்டும் தொடரும் என்றும் அம்த்ஷா எச்சரிக்கை விடுத்தார்.
DINASUVADU
டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…