ராகுல் காந்திக்கு எதிராக மாநில தலைவரையே களமிறக்கிய பாஜக.!
Election2024 : கேரளாவில் ராகுல் காந்தியை எதிர்த்து அம்மாநில பாஜக தலைவர் கே.சுரேந்திரன் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாடுமுழுவதும் 543 தொகுதிகளுக்கான மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி தொடங்கி ஜூன் மாதம் 1ஆம் தேதிவரையில் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது . இதில் கேரள மாநிலத்தில் உள்ள 20 மக்களவை தொகுதிகளுக்கும் 2ஆம் கட்ட தேர்தல் தேதியான ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது .
இதில், காங்கிரஸ் முக்கிய தலைவர் ராகுல்காந்தி , கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் வென்றிருத்த வயநாடு தொகுதியில் களமிறங்குகிறார். இவரை எதிர்த்து கேரளா மாநில பாஜக தலைவரையே பாஜக தலைமை களமிறக்கியுள்ளது. பாஜக தலைமை நேற்று 5வது கட்டமாக 111 பாஜக வேட்பாளர்கள் அடங்கிய பட்டியலை வெளியிட்டது.
அதில், கேரள மாநிலம் வயநாடு தொகுதியில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்து போட்டியிட பாஜக மாநில தலைவர் கே.சுரேந்திரன் என்பவரை களமிறக்கியுள்ளது. 54 வயதான சுரேந்தின் , கேரளா காசர்கோடு பகுதியை சேர்ந்தவர், இளம் வயதில் RSS, பாஜக மாணவரணி ஆகிய அமைப்புகளில் பணியாற்றி உள்ளார் . அதன் பிறகு கடந்த 2020ஆம் ஆண்டு பாஜக மாநில தலைவராக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகுதியில் ஏற்கனவே, கம்யூனிஸ்ட் கட்சி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் டி.ராஜா அவர்களின் மனைவி ஆன்னி ராஜா போட்டியிடுகிறார். இதனால், கேரளா மாநிலம் வயநாடு தொகுதியில் தற்போது தேர்தல் களம் மிகவும் பரபரப்பாகி உள்ளது.