பெங்களூருவில் தொடங்கிய பாஜக மாநில செயற்குழு கூட்டம் ..!
பெங்களூருவில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. இந்த கூட்டம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை நடைபெற்றவுள்ளது. கர்நாடக மாநில தலைவர் விஜயேந்திரா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவ் கலந்து கொள்ளவதாக பாஜக மாநில பொதுச்செயலாளர் ராஜீவ் ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், பெங்களூரு அரண்மனை மைதானத்தில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் தொடங்கியது. மத்திய அமைச்சர்கள் பூபேந்தர் யாதவ், பிரகலாத் ஜோஷி, ராஜீவ் சந்திரசேகர், கர்நாடக முன்னாள் முதல்வர்கள் பி.எஸ். எடியூரப்பா, பசவராஜ் பொம்மை, மாநில பாஜக தலைவர் பி.ஒய்.விஜயேந்திரா, கட்சித் தலைவர்கள் ஜெகதீஷ் ஷெட்டர், சி.டி.ரவி உள்ளிட்டோர் பெங்களூருவில் பாஜக மாநில செயற்குழு கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளனர்.
I.N.D.I.A கூட்டணி… நிதிஷ் குமார் பிரதமராக வாய்ப்பு இருக்கிறது.! அகிலேஷ் யாதவ் கருத்து.!
இந்தக் கூட்டம் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாகவே நடைபெறுவதாக இருந்தது. ஆனால், பெங்களூருக்கு பிரதமர் நரேந்திர மோடியின் வருகையால் மாநில செயற்குழு கூட்ட ஒத்திவைக்கப்பட்டது. மாநிலத் தலைவராக விஜயேந்திரன் பொறுப்பேற்ற பிறகு நடைபெறும் முதல் மாநில செயற்குழு இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அரசுக்கு எதிராக பாஜக மேற்கொள்ளும் பிரச்சாரங்கள் மற்றும் வரவிருக்கும் மக்களவைத் தேர்தல் தொடர்பான விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.