ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.
இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.
இன்று ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளாததால் ஆளும் கூட்டணி கட்சிகளான ஜேடி(யு) மற்றும் ஆர்ஜேடி இடையேயான விரிசல் ஏற்பட்டதா..? என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகிறது. துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தேநீர் விருந்தில் வருகை தராதது குறித்து முதல்வர் நிதிஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேட்டபோது”இங்கே இல்லாதவர்களிடம் கேளுங்கள்” என்றார்.
மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா நிதிஷ்குமார்? வெளியான பரபரப்பு தகவல்!
தேநீர் விருது நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் கல்வி அமைச்சருமான அமைச்சர் அசோக் குமார் சவுத்ரி கலந்து கொண்டார். ஆனால் ஆர்ஜேடி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்வின் போது, முதல்வர் நிதிஷ் குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் விஜய் குமார் சின்ஹாவுடன் உரையாடினார்.
இந்நிலையில், பீகார் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பீகார் பாஜக பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னா வருகிறார் என கூறப்படுகிறது.
பீகாரில் தற்போது, 243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 79 எம்எல்ஏக்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பிஜேபிக்கு 78 எம்எல்ஏக்கள், ஜேடி(யு)க்கு 45, காங்கிரஸுக்கு 19, இடதுசாரி கட்சிகளுக்கு 16, இதர கட்சிகள் 5 இடங்களில் உள்ளது. பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…