பீகார் அரசியல் குழப்பம்.. பாஜக மாநில செயற்குழு கூட்டம்..!

bjp

ஜேடியு தலைவரும், பீகார் முதலமைச்சருமான முதல்வர் நிதிஷ் குமார் தனது கூட்டணி கட்சியான லாலுபிரசாத் யாதவ் தலைமையிலான ஆர்ஜேடியுடன் விலகி வரும் ஞாயிற்றுக்கிழமை பாஜக ஆதரவுடன் பீகார் முதல்வராக பதவியேற்கலாம் என நிதிஷ் குமார்  முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

இந்த தகவலால் பீகாரில் அரசியல் கொந்தளிப்பு ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், இது குறித்து (ஆர்ஜேடி) RJD மற்றும் ஜேடியு (JDU) ஆகிய இரு தரப்பிலும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை. பாட்னாவில் உள்ள ராஜ்பவனில் ஆளுநர் அழைத்த தேநீர் விருந்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் புறக்கணித்த நிலையில், முதல்வர் நிதிஷ் குமார் தேநீர் விருந்தில் கலந்துகொண்டார்.

இன்று ராஜ்பவனில் நடைபெற்ற தேநீர் விருந்தில் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கலந்து கொள்ளாததால் ஆளும் கூட்டணி கட்சிகளான ஜேடி(யு) மற்றும் ஆர்ஜேடி இடையேயான விரிசல் ஏற்பட்டதா..?  என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்து வருகிறது.  துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தேநீர் விருந்தில் வருகை தராதது குறித்து முதல்வர் நிதிஷ் குமாரிடம்  செய்தியாளர்கள் கேட்டபோது”இங்கே இல்லாதவர்களிடம் கேளுங்கள்” என்றார்.

மீண்டும் பாஜக கூட்டணிக்கு செல்கிறாரா நிதிஷ்குமார்? வெளியான பரபரப்பு தகவல்!

தேநீர் விருது நிகழ்ச்சியில் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் பீகார் கல்வி அமைச்சருமான அமைச்சர் அசோக் குமார் சவுத்ரி கலந்து கொண்டார். ஆனால் ஆர்ஜேடி தலைவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இந்த நிகழ்வின் போது, ​​முதல்வர் நிதிஷ் குமார், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரான பாஜகவின் விஜய் குமார் சின்ஹாவுடன் உரையாடினார்.

இந்நிலையில், பீகார் பாஜக மாநில செயற்குழு கூட்டம் நாளை மற்றும் நாளை மறுநாள் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்திற்கு பீகார் பாஜக பொறுப்பாளர் வினோத் தாவ்டே நாளை பாட்னா வருகிறார் என கூறப்படுகிறது.

பீகாரில் தற்போது, ​​243 உறுப்பினர்களை கொண்ட சட்டசபையில் 79 எம்எல்ஏக்களுடன் ஆர்ஜேடி தனிப்பெரும் கட்சியாக உள்ளது. பிஜேபிக்கு 78 எம்எல்ஏக்கள், ஜேடி(யு)க்கு 45, காங்கிரஸுக்கு 19, இடதுசாரி கட்சிகளுக்கு 16, இதர கட்சிகள் 5 இடங்களில் உள்ளது. பீகாரில் ஆர்ஜேடி, ஜேடியூ, காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகள் அடங்கிய கூட்டணி 159 இடங்களைக் கைப்பற்றியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்