பாஜகவுக்கு எதிரான இந்தப் போரில் ஒரு மித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்க மம்தா பானர்ஜி எழுதியுள்ள கடிதத்தில், முதல்வர் டெல்லி முதல்வரை விட ஆளுநருக்கு கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்தை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. இன்று டெல்லி அரசின் அதிகாரத்தை பறித்த பாஜக அரசு நாளை பிற மாநிலங்களின் அதிகாரத்தையும் பறிக்கும். பாஜக ஆட்சி செய்யாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு பிரச்சினைகளை உருவாக்குகிறது. மேற்குவங்கம் உள்ளிட்ட மாநில ஆளுநர்கள் பாஜகவின் தொண்டர்களுக்கு போல் செயல்படுகின்றன.
சிபிஐ, அமலாக்கத்துறையின் மூலம் திமுக, திரிணாமுல் தகவல்களை மத்திய பாஜக அரசு குறி வைக்கிறது. தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் தேர்தல் நெருக்கும் நிலையில் மத்திய அரசு வருமானவரி சோதனைகளை நடத்துகிறது. பிற கட்சித் தலைவர்களை மட்டும் குறிவைக்கும் சிபிஐ, அமலாக்கத்துறை பாஜக தலைவர்களை கண்டுகொள்வதில்லை.
திமுக தலைவர் மு.கஸ்டாலினுக்கு மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சோனியா காந்தி உள்ளிட்ட பாஜக அல்லாத தலைவர்களுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். பாஜகவால் கூட்டாட்சி தத்துவம் சிதைக்கப்படுவதை தடுக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.
ஒற்றைக் கட்சி ஆட்சி முறையை இந்தியா முழுவதும் கொண்டு வர வேண்டுமென பாஜக நினைக்கிறது. பாஜகவுக்கு எதிரான இந்தப் போரில் ஒரு மித்த கருத்துள்ள கட்சிகள் ஒன்றிணைய வேண்டும். 5 மாநிலங்களில் தேர்தல் முடிந்த பின் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஆலோசித்து முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளனர்.
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…
திருச்சி : 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் , தங்கள் கட்சி கூட்டணி பற்றிய கேள்விகள் குறித்தும், திமுக, பாஜக…
சென்னை : தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை இயல்பைவிட 4% கூடுதலாகப் பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தற்போது, குமரிக்கடல்…
சென்னை ;சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 18] எபிசோடில் மீனா மீது கரிசனம் காட்டுகிறார் விஜயா.. போட்டோசூட்டினால் வந்த பிரச்சனை…
சென்னை : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலம் என்பது வரும் நவ-24 மற்றும் 25ம் தேதிகளில் நடைபெற இருக்கிறது.…
டெல்லி : ஆம் ஆத்மி கட்சியில் இருந்து நேற்று விலகிய டெல்லி முன்னாள் அமைச்சர் கைலாஷ் கெலாட் பாஜகவில் தன்னை இணைத்து…