சுப்ரமணியன் சுவாமி ட்வீட்டால் பாஜகவினர் அதிர்ச்சி..!
நேற்று நிர்மலா சீதாராமன் 2021-22 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டில் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையின் மீது புதிதாக செஸ் வரி விதிக்கப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
இந்நிலையில், பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி இன்று தனது ட்விட்டரில் பதிவிட்ட பதிவில், ராமர் பிறந்த இந்தியாவில் பெட்ரோல் விலையை ரூ.93, சீதா பிறந்த நேபாளத்தில் ரூ.53 எனவும், இராவணன் ஆண்ட இலங்கையில் பெட்ரோல் விலை ரூ.51 என டுவிட் செய்துள்ளார்.
— Subramanian Swamy (@Swamy39) February 2, 2021
அவரது ட்வீட்டை சிலர் தவறு என கமெண்ட் செய்து வருகின்றனர். நேபாளம் மற்றும் இலங்கையில் ஒரு லிட்டர் பெட்ரோல் இவ்வளவு ரூபாய் என பெட்ரோலின் விலையை பதிவிட்டு வருகின்றனர். அதேநேரம், சுப்பிரமணியன் சுவாமி ட்விட் பாஜக ஆதரவாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.