மேற்குவங்கத்தில் தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என கூறிய பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்காவின் பரப்புரைக்கு தேர்தல் ஆணையம் தடை.
மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளுக்கும் 8 கட்டங்களாகச் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்று வருகிறது. இதில் 4 கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், எஞ்சியுள்ள 4 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் அம்மாநிலத்தில் தேர்தல் பிரச்சாரங்கள் அனல் கிளம்பி வருகிறது. இந்த தேர்தலில் மூன்றாவது முறையாக ஆட்சியைத் தக்கவைக்க ஆளும் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜக கட்சிக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது கூச்பெஹாரில் 4 பேருக்கு பதில் 8 பேரையாவது சுட்டுக்கொன்றிருக்க வேண்டும் என பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா கூறியது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதற்கு எதிர்ப்புகளும் கிளம்பி வந்தது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் ராகுல் சின்கா 2 நாள் பிரச்சாரம் செய்ய அம்மாநில தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளது. அதன்படி அவர் நாளை மதியம் 12 மணிவரை பிரச்சாரம் மேற்கொள்ள தடை விதித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த மே 1-ஆம் தேதி…
டெல்லி : கடந்த ஏப்ரல் 22 -ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில், பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பாக கூறப்படும்…
சென்னை : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது. அதனை…
லக்னோ : ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்த நிலையில் அதற்கு பதிலடி கொடுக்கும்…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…
டெல்லி : காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற போர் என்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நிலையில், நேற்று…