நாய் போலவே தாக்குவேன்..சீண்டிய கமல்…சீறும் சிந்தியா..
மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக தாக்குவேன் என்று ஜோதிராதித்ய சிந்தியா பதிலடி கொடுத்துள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் 28 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 3ந்தேதி இடைத் தேர்தல் நடைபெறுகிறது.இந்நிலையில் அங்கு பாஜக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
பிரச்சாரத்தின் போது தாப்ரா தொகுதியில் போட்டியிடும் மாநில அமைச்சரும், பாஜக வேட்பாளருமான இமர்தி தேவியை கமல்நாத் அவதூறாக பேசியதாக சர்ச்சை வெடித்தது.இதனால் கமல்நாத்தின் கருத்துக்கு பல்வேறு தரப்பிலிருந்து கடும் கண்டனங்கள் எழுந்த நிலையில் கமல்நாத் மீது மீண்டும் ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது.
பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோதிராதித்ய சிந்தியா ம.பி. இடைத் தேர்தலில் போட்டியிடும் பாஜக வேட்பாளர்களுக்கு மக்கள் ஆதரவளிக்க வேண்டும். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் கமல்நாத் என்னை நாய் என்று கூறுகிறார்.
ஆமாம் நான் நாய் தான் ஏனென்றால் நான் மக்களின் சேவகன். நாய் அதன் உரிமையாளர்களை பாதுகாக்கிறது. மக்களின் காவலனான நான் மக்களுக்கு எதிராக செயல்படுவோரை நாயாக போலத் தாக்குவேன் எனக் கூறினார்.