பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக தேசிய தலைவர்.!

Published by
மணிகண்டன்

மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இறுதி சடங்கிற்கு நேரில் வந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தினர். 

ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் இரவு அவர் உயிரிழந்தார்.

[Image source : India Tv]
அவரது மறைவுக்கு பிரதமர் மோடி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உட்பட நாட்டில் உள்ள பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர்.அவரது நல்லடக்கம் இன்று பஞ்சாபில் அவரது சொந்த ஊரான லம்பி கிராமத்தில் நடைபெறுகிறது. இன்று பிரகாஷ் சிங் பாதல் அடக்கம் காரணமாக மாநிலம் முழுவதும் அரசு பொது விடுமுறை அறிவித்துள்ளது.

தேசிய தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுததினார். அதே போல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் லம்பி கிராமத்திற்கு வந்து பிரகாஷ் சிங் பாதலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.

PM Modi condolence on Parkash Singh Badal house
[Image source : Hindustan Times]
பிரதமர் நரேந்திர மோடி முன்னதாக, நேற்று (புதன்கிழமை) சண்டிகர் வந்து சிரோமணி அகாலி தளம் (எஸ்ஏடி) அலுவலகத்திற்கு நேரில் சென்று தனது இறுதி அஞ்சலியை பிரகாஷ் சிங் பாதலுக்கு செலுத்தினார்.

மறைந்த பிரகாஷ் சிங் பாதல், 1970-1971, 1977-1980, 1997-2002 மற்றும் 2007-2017 ஆகிய காலகட்டங்களில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பாக பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் என்பதும், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்ததில் இளம் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தான் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.

Published by
மணிகண்டன்

Recent Posts

ராமதாஸ் – அன்புமணி மோதல் : “எல்லாம் சரியாகிவிடும்”..எம்.எல்.ஏ.அருள் பேச்சு!

சென்னை : இன்று நடைபெற்ற பாமக பொதுக்குழு அந்த கூட்டத்தில் இளைஞரணி தலைவர் நியமனம் செய்யப்படுவது தொடர்பாக ராமதாஸ்- அன்புமணி…

48 minutes ago

தந்தை ராமதாஸ் உடன் வார்த்தை மோதல்! பனையூரில் தனி அலுவலகம் தொடங்கிய அன்புமணி!

விழுப்புரம் : இன்று பாமக பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி மற்றும் பாமக…

1 hour ago

வன்கொடுமை விவகாரம்: மாணவிக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தர

சென்னை: அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம்…

2 hours ago

விடைபெற்றார் மன்மோகன் சிங்….21 குண்டுகள் முழங்க உடல் தகனம்!

டெல்லி: முன்னாள் பிரதமரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் (92) வயது மூப்பு தொடர்பான பிரச்சினைகளுக்காக 26ம் தேதி…

3 hours ago

மஞ்சனத்தி மரத்தில் மறைந்திருக்கும் ஆரோக்கிய நன்மைகள்..!

குறிப்பிட்ட உடல்நல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக இருக்கக்கூடிய நுணாமரம் எனும் மஞ்சனத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் பயன்களையும் இந்த செய்தி…

3 hours ago

“பேரணி விவகாரத்தை ஊதி பெரிதுபடுத்த வேண்டாம்” – அமைச்சர் சேகர்பாபு!

சென்னை: விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி, சென்னை கோயம்பேட்டில் உள்ள அவரது நினைவிடத்தில் குருபூஜை நடைபெற்றது. காலையில்…

3 hours ago