பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய பாஜக தேசிய தலைவர்.!

மறைந்த பஞ்சாப் முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் இறுதி சடங்கிற்கு நேரில் வந்து பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா அஞ்சலி செலுத்தினர்.
ஐந்து முறை பஞ்சாப் மாநில முதல்வராக பதவியில் இருந்த சிரோமணி அகாலி தளம் கட்சியின் மூத்த அரசியல் தலைவர் பிரகாஷ் சிங் பாதல் (வயது 95) வயது மூப்பு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு மொஹாலியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் சிகிச்சை பலனின்றி கடந்த செவ்வாய் இரவு அவர் உயிரிழந்தார்.
தேசிய தலைவர்கள் பிரகாஷ் சிங் பாதல் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலிசெலுத்து வருகின்றனர். தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுததினார். அதே போல பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவும் லம்பி கிராமத்திற்கு வந்து பிரகாஷ் சிங் பாதலுக்கு நேரில் இறுதி அஞ்சலி செலுத்தினார்.
[Image source : Hindustan Times]
மறைந்த பிரகாஷ் சிங் பாதல், 1970-1971, 1977-1980, 1997-2002 மற்றும் 2007-2017 ஆகிய காலகட்டங்களில் சிரோமணி அகாலி தளம் கட்சி சார்பாக பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார் என்பதும், பஞ்சாப் மாநிலத்தில் இதுவரை பதவி வகித்ததில் இளம் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல் தான் என்ற பெருமையையும் அவர் பெற்றுள்ளார்.