புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது பாஜக கடும் அதிருப்தி அடைந்துள்ளது.
இந்திய தேர்தல் ஆணையம் புதுச்சேரியில் காலியாக இருந்த காமராஜ் நகர் தொகுதிக்கு அக்டோபர் 21-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தது.இதனால் அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் உள்ளது.
இந்த நிலையில் தான் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி முன்னிலையில் தொகுதிப்பங்கீடு ஒப்பந்தம் கையெழுத்தானது.அதன்படி புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் என்.ஆர்.காங்கிரஸ் போட்டியிடும் என்று அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி அறிவித்தனர்.மேலும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு அதிமுக முழு ஆதரவு அளிக்கும் என்றும் அறிவித்தார்கள்.
ஆனால் தேர்தல் தேதி அறிவித்த முதலே பாஜக காமராஜ் நகர் இடைத்தேர்தலில் போட்டியிட முழு வீச்சில் தயாராகி வந்தது. காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட பாஜக சார்பில் விருப்பமனு வழங்கப்பட்டது.மேலும் நேர்காணலும் நடத்தப்பட்டது.எதிர்பாராத விதமாக என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.நேற்று அதிமுக கூட்டணியில் உள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சிக்கு காமராஜ் நகர் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்பட்டது .அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக கடும் அதிருப்தி அடைந்ததாக தகவல் வெளியாகி வந்தது.எனவே இன்று பாஜக -வை சமாதானப்படுத்த என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் முயற்சி செய்தனர்.ஆனால் அந்த முயற்சி தோல்வியில் முடிந்துள்ளது.இதனால் பாஜக தனித்து போட்டியிட முடிவு செய்து வருவதாக தகவல் வெளியாகி வருகிறது.