பாஜக தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பு
பாஜக தேசிய தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை பதவிக்காலம் நீட்டிக்கப்படுவதற்கான ஒப்புதலை பாஜக தேசிய செயற்குழு ஒருமனதாக வழங்கியுள்ளது. இதன்மூலம் நட்டா தலைமையில் அக்கட்சி மக்களவை தேர்தலை சந்திக்கவுள்ளது உறுதியாகியுள்ளது.
டெல்லியில் பாஜகவின் தேசிய பொதுக்குழு கூட்டம் நேற்று தொடங்கிய நிலையில் இன்று இரண்டாம் நாளும் தொடர்ந்தது. இதில் பிரதமர் மோடி பங்கேற்று பேசும் போது, “‛வரும் மக்களவை தேர்தலில் பாஜக 370 தொகுதிகளை வெல்ல வேண்டும். பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி 400 தொகுதிகளை வெல்ல வேண்டும். அடுத்த 100 நாட்கள் மிகவும் முக்கியமானது. புதிய வாக்காளர்களை தேடிச்செல்ல வேண்டும். அவர்களின் நம்பிக்கையை பெற வேண்டும்” என்றார்.
விவசாயிகள் போராட்டம்..! மத்திய அமைச்சர்களுடன் விவசாயிகள் 4ஆம் கட்ட பேச்சுவார்த்தை
மேலும், இந்த பொதுக்குழு கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில் முக்கியமானது அக்கட்சியின் தலைவர் ஜே.பி நட்டாவின் பதவிக்காலம் நீட்டிப்பது குறித்து வெளியான அறிவிப்பு. அவரின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதம் முடிவுக்கு வந்தது. ஆனாலும் அமித்ஷா ஒப்புதலுடன் பதவியில் தொடர்ந்து வந்தார். இந்த சூழலில் தான் ஜே.பி நட்டாவின் பாஜக தேசிய தலைவர் பதவி ஜுன் மாதம் வரை நீட்டிப்பு செய்யப்பட்டு பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.