இன்றும், நாளையும் பாஜக தேசிய கவுன்சில் கூட்டம்.. சுமார் 11,000 நிர்வாகிகள் பங்கேற்பு!
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், தேசிய கட்சிகளான பாஜக, காங்கிரஸ் உட்பட அனைத்து மாநில கட்சிகளும் தேர்தலுக்கான பணியில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறன்றனர். அதன்படி, கூட்டணி மற்றும் தொகுதி தொடர்பான பேச்சுவார்த்தை, தேர்தல் அறிவிக்க தயாரிப்பு, வேட்பளர்கள் தேர்வு மற்றும் தேர்தல் பரப்புரை என அனைத்து கட்சிகளும் விறுவிறுப்பாக செயல்பட்டு வருகிறது.
இந்த சூழலில், நாடாளுமன்ற தேர்தலையொட்டி இன்றும், நாளையும் டெல்லியில் பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெறுகிறது. அதன்படி, டெல்லி பாரத் மண்டபத்தில் முதல்நாளான இன்று பாஜகவின் தேசிய கவுன்சில் கூட்டம் தொடங்குகிறது. இன்று பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா கூட்டத்தில் பங்கேற்கிறார்.
INSAT-3DS : ஜிஎஸ்எல்வி எப்14 ராக்கெட் இன்று மாலை விண்ணில் பாய்கிறது!
மத்திய அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், பாஜக தலைவர்கள் ஆலோசனை நடத்த உள்ளனர். செயற்குழு கூட்டத்தில் பிரதமர் மோடி நாளை பங்கேற்க திட்டமிட்டு இருப்பதாக கூறப்படுகிறது. தேசிய கவுன்சில் கூட்டத்தில் மக்களவை தேர்தல் வியூகம் உள்ளிட்டவை குறித்து பாஜக தலைமை ஆலோசனை செய்யவுள்ளதாகவும், இரண்டு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும், டெல்லியில் இந்த இரண்டு நாள் நடைபெறும் பாஜக செயற்குகுழு கூட்டத்தில் தேசிய செயற்குழு, தேசிய கவுன்சில் நிர்வாகிகள், நாடு முழுவதும் உள்ள மாவட்ட தலைவர்கள், மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் என சுமார் 11,000 பேர் பங்கேற்க உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.