பாஜக எம்பிகள் தொகுதி வளர்ச்சி நிதியிலிருந்து 1கோடி நிதியுதவி அளிப்பார்கள்… பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தகவல்..
கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உலகம் முழுவது அச்சுறுத்தி வரும் நிலையில் இந்தியாவில் தடுப்பு நடவடிக்கை தொடரப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை எதிர்கொள்ளவும் தடுப்பு நடவடிக்கிக்கைகளுக்கு நிதியுதவி பலராலும் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் அனைத்து பாஜ எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை நிவாரண நிதிக்கு வழங்குவர் என்றும், மேலும், பாஜக எம்.பி.க்கள் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்தும் ரூ. 1 கோடியை மத்திய நிவாரண நிதிக்கு அனுப்பிவைப்பா் என்றும், பாஜக சார்பில் லோக்சபாவில் 303 உறுப்பினர்களும், ராஜ்யசபாவில் 83 உறுப்பினர்கள் என மொத்தம் 386 எம்.பிக்கள் உள்ளனா். தொகுதி மேம்பாட்டு நிதியாக எம்.பி ஒருவருக்கு ஆண்டுதோறும் ரூ.5 கோடி வழங்கப்படுகிறது என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.