மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த பாஜக எம்பி! – இணையத்தில் வைரலாகும் வீடியோ!

ராஞ்சியில் பாஜக எம்பி ஒருவர் மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி அதிர்ச்சி.
ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் 15 வயதிற்கு உட்பட்பட்டவர்களுக்கு நடந்த தேசிய மல்யுத்த சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பாஜக எம்பியும், மல்யுத்த கூட்டமைப்பின் தலைவருமான பிரிஜ்பூஷன் சரண் சிங் பங்கேற்றார். அப்போது 15 வயது பூர்த்தி அடைந்த ஒருவர் தன்னை போட்டியில் பங்கேற்க செய்யும்படி பிரிஜ்பூஷனிடம் நிர்பந்தம் செய்ததாக கூறப்படுகிறது.
அந்த மல்யுத்த வீரர் 15 வயதுக்கு மேல் உள்ளவர் என்பதால் அவருக்கு தகுதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்ததாகவும், மீண்டும் நிர்பந்தித்தாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பாஜக எம்பி அந்த வீரரை மேடையிலேயே அறைந்தார். இதன் பின் அந்த இளைஞர் மேடையில் இருந்து அழைத்து செல்லப்பட்டார். மல்யுத்த வீரரை மேடையிலேயே அறைந்த வீடியோ காட்சி இணையத்தில் வெளியாகி பார்ப்பவர்களுக்கு அதிர்ச்சியை அளிக்கிறது.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த கைசர்கஞ்ச் தொகுதி எம்பியாக பிரிஜ்பூஷன் ஷரன் சிங் உள்ள இவர் இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#WATCH | Brij Bhushan Sharan Singh, BJP MP from Uttar Pradesh, slaps young #wrestler on stage in Ranchi. The video has gone viral. #Ranchi #brijbhushansharansingh pic.twitter.com/muD8sdaqsO
— Subodh Kumar (@kumarsubodh_) December 18, 2021
லேட்டஸ்ட் செய்திகள்
தெறிக்கவிடலாமா.? GBU தரமான சம்பவம்., அஜித் ரசிகர்கள் கொண்டாட்டம்! டீசர் வீடியோ இதோ…
February 28, 2025
AFGvAUS : 274 டார்கெட்., பவுலிங்கில் மிரட்டிய ஆஸ்திரேலியா! நிலைத்து ஆடிய ஆப்கானிஸ்தான்!
February 28, 2025