#BREAKING: பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார்.!
ஹரியானா மாநிலம் அம்பாலா மக்களவை தொகுதி பாஜக எம்.பி. ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் காலமானார்.
ஹரியானாவின் அம்பாலாவிலிருந்து மூன்று முறை பாஜக எம்.பி.யாகவும், முன்னாள் மத்திய அமைச்சருமான ரத்தன் லால் கட்டாரியா உடல்நலக்குறைவால் இன்று உயிரிழந்தார். அவர் நிமோனியாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு வயது 71, ஹரியானாவின் அம்பாலா தொகுதியில் இருந்து மக்களவைக்காக தேர்வு செய்யப்பட்டவர் ரத்தன் லால்.
பாஜக எம்.பி. ரத்தன் லால் கடந்த 2019 லோக்சபா தேர்தலில், அம்பாலா தொகுதியில் இருந்து ஹரியானா பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் குமாரி செல்ஜாவை கட்டாரியா 57 சதவீத வாக்குகள் பெற்று சுமார் 3.42 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
மேலும், இவர் ஜல் சக்தி துறையின் இணை அமைச்சராகவும் இருந்திருக்கிறார். 2000 முதல் 2003 வரை ஹரியானாவின் பாஜக மாநிலத் தலைவராக ரத்தன் லால் இருந்திருக்கிறார். இவரது மறைவுக்கு மாநில முதலமைச்சர் மனோகர் லால் கட்டார் உள்பட அரசியல் தலைவர்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.