இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும்.. அது அடிமை அடையாளம்.? பாஜக எம்பி சர்ச்சை பேச்சு.!

Rajyasaba BJP MP Naresh Bansal

இந்தியா என்ற பெயரை நீக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் பாஜக எம்பி நரேஷ் பன்சால் பேசியுள்ளார். 

நாடாளுமன்ற இரு அவைகளிலும் மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 20ஆம் தேதி தொடங்கி 7 நாட்கள் முடிவடைந்து உள்ளது. இந்த ஏழு நாட்களும் மணிப்பூர் கலவரம் தொடர்பாக விவாதிக்க கோரி எதிர்க்கட்சியினர் அமளியில் ஈடுபட்டு வருவதால் தொடர்ந்து பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டு, முடங்கி வருகிறது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தொடரில் மாநிலங்களவையில் பேசிய பாஜக எம்.பி நரேஷ் பன்சால் இந்தியா எனும் பெயர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, ஆங்கிலேயர்கள் தான் பாரதத்தின் பெயரை இந்தியா என மாற்றினார்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக நமது நாடு பாரதம் எனும் பெயரில்தான் அறியப்பட்டு வந்துள்ளது. இதற்கான பழங்கால சான்றுகள் சமஸ்கிருத நூல்களில் உள்ளன என்று குறிப்பிட்டார்.

மேலும், காலனித்தவ ராஜ்ஜியத்தால் (ஆங்கிலேயர்களால்) இந்தியா என்னும் பெயர் வழங்கப்பட்டது. இது அடிமைத்தனத்தின் சின்னமாக உள்ளது. எனவே இந்தியா என்ற பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும். கடந்த வருடம் சுதந்திர தினத்தின் போது செங்கோட்டையில் பிரதமர் மோடி உரையாற்றுகையில் காலணித்துவத்தின் அனைத்து சின்னங்களையும் அளிக்க வேண்டும் என்று பேசி இருந்தார் என்று பிரதமர் மோடி பேசியது குறித்தும் குறிப்பிட்டு இந்தியாவின் பெயரை அரசியலமைப்பிலிருந்து நீக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார் பாஜக எம்.பி நரேஷ் பன்சால்.

இந்தியா எனும் பெயரை நீக்க வேண்டும் என கூறிய பாஜக எம்.பி நரேஷ் பன்சாலின் கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    லேட்டஸ்ட் செய்திகள்